What is IAS Exam?

IAS தேர்வு என்றால் என்ன?

IAS  மற்றும் IPS  உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

IAS  தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன?

 ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS  தேர்விற்கான வயது வரம்பு என்ன?

குறைந்தபட்ச வயது : 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது   :   பொதுப்பிரிவினர் (GENERAL) : 32 

                                       பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35

                                        ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : 37

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும்?

பொதுப்பிரிவினர் (GENERAL)                    : 6 முறை

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC)        :   9 முறை

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST)   : எண்ணிக்கை இல்லை(Unlimited)

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும்?

  • சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு
  • ஆளுமை அதிகாரம்
  • பெருமதிப்பிற்குரிய பணி
  • சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை   மேலும் பல…..

IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா?

இல்லை.அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா?

முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா?

இல்லை.ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.என்னால் முடியுமா ?

கண்டிப்பாக முடியும். இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.உண்மையான போட்டியாளர்கள் என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா?

இல்லை. IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.அந்தப் பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?

முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும்?

IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.அது ஓர் போட்டித் தேர்வு.ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா?

முற்றிலும் தவறான கருத்து.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா?

இல்லை.நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்

  • தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்
  • வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்
  • சரியான திட்டமிடல்
  • திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்
  • மாதிரித் தேர்வுகள் எழுதுதல்
  • சரியான வழிகாட்டல்
  • இறுதியாக முழு நம்பிக்கையோடு இருத்தல்

இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் ஒர் IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்!!

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author